ஆலமரம்


பஞ்சாயத்துக் காட்சிகளுக்கு மட்டுமே பயன்பட்டு வந்த ஆலமரம் இப்போது பேய், பிசாசுகளால் முக்கியத்துவம் பெறப்போகிறது. புதுமுகம் ஹேமந்த் - கேரள நடிகை அவந்திகாவும் மோகனும் நாயகி, நாயகனாக நடிக்கும் படம் ‘ஆலமரம்’. காதல், பேய், பலி, மரணம் எல்லாம் இதில் உண்டு. துரைசிங் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசை ராம்ஜீவன். சின்னத்திரை தொடர்களில் நடித்துப் புகழ்பெற்ற சிந்து இப்படத்தில் பேயாக நடிக்கிறாராம். உயிரைக் குடுத்து நடிப்பார் போல!

அரவிந்த்

© TamilOnline.com