இஞ்சி முறப்பா


ஸ்ரீபாலாஜி, சோனி சிறிஷ்டா நாயக, நாயகியாக அறிமுகமாகும் படம் இஞ்சி முறப்பா. இவர்களுடன் புதுமுகம் கிருஷ்ணா, ரிஷிகா, நெல்லை சிவா, லொள்ளு சபா மனோகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுகபாரதி பாடல்களை எழுத மணிசர்மா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் S. சகா. திரைப்படக் கல்லூரி மாணவரான இவர், எஸ்.ஏ. சந்திரசேகரனிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர். இப்படம் பற்றி அவர், "அண்ணன்-தங்கை பாசத்தையும், நாயகனின் காதலையும் திரைக்கதையில் சுவையாக சொல்லியிருக்கிறோம். தன் தங்கையை எப்படியெல்லாமோ வாழவைக்க அண்ணன் கண்ட கனவு ஒரு கட்டத்தில் பொய்க்கிறது. அவள் காதலனிடம் ஏமாந்து நிற்க, அப்போது அண்ணன் எடுக்கிற முடிவுதான் கதை" என்கிறார். இஞ்சி முறப்பா இனிப்பா, காரமா?

அரவிந்த்

© TamilOnline.com