ஜீவா
பாண்டிய நாடு படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கும் படம் ஜீவா. இதில் நாயகனாக விஷ்ணு விஷால் நடிக்க, ஸ்ரீதிவ்யா நாயகியாக நடிக்கிறார். கிரிக்கெட்டைச் சுற்றி நடக்கும் இப்படத்திற்கு இசை டி. இமான். சுசீந்திரன் கூறுகிறார், "கிரிக்கெட்டில் ஜெயிச்சவங்க, தோத்தவங்க ஒவ்வொருத்தர்கிட்டேயும் ஒரு வலியிருக்கு. அப்படியொருத்தனோட வலிதான் இந்தப் படம். 50 வயசுல சினிமா டைரக்டராயிடலாம், பணக்காரனாயிடலாம், விஞ்ஞானி ஆகலாம். ஆனால் 22 வயசுக்குள்ள கிரிக்கெட் வீரனாக வேண்டும். தவறவிட்டால் அப்புறம் எப்பவுமே ஆகமுடியாது. அப்படி 20 வருட உழைப்பு, கனவு இரண்டையும் தொலைச்சவன் இன்னொரு வாழ்க்கையைத் தேடி எங்கே போவான் என்பதைப் பேசுகிற படம் இது. எல்லா நாட்டுலேயும் கிரிக்கெட் விளையாடித்தான் தோத்துப் போவாங்க. நம்ம நாட்டுல மட்டும்தான் வாய்ப்பு கிடைக்காமலேயே தோத்துப் போறாங்க. அதைத்தான் இந்தப் படம் பேசப்போகுது." க்ளீன் போல்ட்.அரவிந்த்

© TamilOnline.com