லஷ்மன் ஸ்ருதி அமெரிக்க நிகழ்ச்சிகள்
தமிழகத்தின் மிகப்பிரபல இசைக்குழுவான லக்ஷ்மன் ஸ்ருதி அக்டோபர் 3ம் தேதி தொடங்கி 26வரை அமெரிக்கா மற்றும் கனடாவில் 12 இடங்களில் இசைநிகழ்ச்சிகளை வழங்கவுள்ளது. இதனை கலாலயா யு.எஸ். ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவில் முன்னர் இசைப்பயணம் செய்துள்ள லஷ்மன் ஸ்ருதி இசைக்குழுவில் பின்னணிப் பாடகர் க்ரிஷ், ஹரிஹரசுதன், வேல்முருகன், மாலதி லஷ்மன், ரோஹிணி மற்றும் சூப்பர் சிங்கர்கள் சாய்சரண், அனு, அனிதா ஆகியோர் பங்கேற்றுப் பாடுகின்றனர்.

இந்தியா மட்டுமல்லாது உலகெங்கும் பல நாடுகளில் 8000 நிகழ்ச்சிகளுக்கு மேல் நடத்தியுள்ள லஷ்மன் ஸ்ருதி இசைக்குழு 1994 ஆம் ஆண்டு சென்னை காமராஜர் அரங்கில் தொடர்ந்து 36 மணி நேரம் இசை நடத்தி உலக சாதனையை உண்டாக்கியவர்கள்.

அக்டோபர் 18 அன்று சான் ஹோசேவில் நடைபெறும் நிகழ்ச்சியில் இசையமைப்பாளரும், பாடலாசிரியருமான கங்கை அமரன் மற்றும் 'சின்னக் கலைவாணர்' நடிகர் விவேக் பங்கேற்க உள்ளனர். இது அமெரிக்காவில் லஷ்மன் ஸ்ருதியின் 50வது நிகழ்ச்சி என்பது குறிப்பிடத் தக்கது.

நிகழ்ச்சி நடைபெறும் நாட்கள், இடங்கள், தொடர்பு எண்கள்:

அக். 03 ஆஸ்டின் - வெள்ளி மாலை: 7:00 மணி - 512 785 2681, 512 773 6754
அக். 04 சான் டியகோ - சனி மாலை: 3:00 மணி - 859 859 0078, 858 342 5260
அக். 05 சியாட்டல் - ஞாயிறு மாலை: 4:00 மணி - 425 785 7316
அக். 10 டாலஸ் - வெள்ளி மாலை: 7:00 மணி - 972 423 8560
அக். 11 சிகாகோ - சனி மாலை: 6:00 மணி - 630 506 1234
அக். 12 செயின்ட் லூயிஸ் - ஞாயிறு மதியம்: 2:00 மணி - 312 566 7009, 314 878 5251
அக். 17 சாக்ரமென்டோ - வெள்ளி மாலை: 7:00 மணி - 916 509 1916, 916 452 5881
அக். 18 சான் ஹோசே - சனி மாலை: 5:00 மணி - 510 305 9285
அக். 19 வேன் கூவர் (கனடா) - ஞாயிறு மாலை: 6:00 மணி - 604 275 1471
அக். 24 மில்வாக்கி - வெள்ளி மாலை: 7:00 மணி - 510 305 9285
அக். 25 ஃபிலடெல்பியா - சனி மாலை: 6:30 மணி - 610 630 0276, 484 620 1747
அக். 26 வாஷிங்டன் டி.சி. - ஞாயிறு மாலை: 4:00 மணி - 703 725 9199, 703 939 5469

அனைத்து நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் கலா ஐயர் அவர்களைத் தொடர்பு கொள்ள: தொலைபேசி - 510 305 9285

வாஷிங்டன் டி.சி.யில் இருந்து இயங்கும் ஐந்தாவது தூண் இந்தியாவில் ஊழலை ஒழிக்க உழைக்கிறது. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் அது ஒத்துழைப்பு வழங்குகிறது இதன் நிறுவனர் விஜய் ஆனந்த். தொடர்புக்கு 3015910986.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com