காளான் கிரேவி
தேவையான பொருட்கள்

காளான்
நறுக்கியது - 2 கிண்ணங்கள்
வெங்காயம் (நறுக்கியது) - 1 கிண்ணம்
தக்காளி சாஸ் - 2 மேசைக்கரண்டி
தக்காளி (நறுக்கியது) - 1 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்
கரம் மசாலாத் தூள் - 1 தேயிலை கரண்டி
சீரகத் தூள் - 1 தேக்கரண்டி
லவங்கப்பட்டைத் தூள் (cinnamon) - 1/4 தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 5
பூண்டு - 2
இஞ்சித் துண்டு - 1
கொத்துமல்லித் தழை - சிறிதளவு

செய்முறை

மிளகாய், பூண்டு இஞ்சியை நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாயகன்ற அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி, சற்றுக் காய்ந்ததும் அரைத்த விழுதைப் போட்டு நன்றாக வதக்கி வெங்காயம் சேர்த்து மேலும் பத்து நிமிடங்கள் வதக்கவும். பின்னர் தக்காளி சாஸ் விட்டு, கொதித்த பின்னர் அதில் காளான் சேர்த்து வதக்கவும். எல்லா மசாலாத் தூளையும் உப்பையும் சேர்த்துக் கொதிக்க விடவும்.

கடைசியாகக் காளான் துண்டங்களைப் போட்டு வேகவிடவும். எல்லாம் ஒன்று சேர வந்ததும் இறக்குவதற்கு முன்பு பால் சேர்க்கவும். இறக்கிய பின் நறுக்கிய கொத்தமல்லி இலைகளைத் தூவவும்.

சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com