நிருத்யநிவேதன்: "Dance of Joy"
ஜூன் 15, 2014 அன்று, நிருத்திய நிவேதன் பள்ளி இயக்குநர் புவனா வெங்கடேஷ், Dance of Joy என்னும் பரதநாட்டிய நிகழ்ச்சி ஒன்றை மில்பிடாஸில் உள்ள சாய் பரிவார் அரங்கில் நடத்தினார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில் கண்ணனையும், குருவாயூரப்பனையும் வரவேற்கும் விதமாக குழந்தைகள் ஆடியது மனதைக் கொள்ளை கொண்டது. பள்ளி இயக்குநர் "நானொரு விளையாட்டு பொம்மையா" என்ற பாடலில் அபிநயத்தின் மூலம் தேவியின் மீதுள்ள பக்தியையும், சரணாகதியையும் நன்கு வெளிப்படுத்தினார். ஆற்றலும் துடிப்புமிக்க பள்ளியின் முதன்மை மாணவியான ஹர்ஷிதா வெங்கடேஷின் நடனங்களான 'நிருத்தாஞ்சலி', 'மயில்வாகன' மற்றும் 'ஸ்ரீசக்ர ராஜ" மிகச் சிறப்பாக இருந்தன.

ஹர்ஷிதாவின் 'பிருந்தாவனி வேணு' என்ற பாடலுக்கான நடனம் பார்த்தோரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. விறுவிறுப்பான 'பிருந்தாவனி' தில்லானாவோடு, உலக அமைதிக்காக 'சர்வ மங்களம் பவது' என்ற பாடலோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com