ஜீரோ


அஷ்வின் நாயகனாகவும், ஷிவதா நாயகியாகவும் நடிக்கும் படம் ஜீரோ. ஜே.டி. சக்ரவர்த்தி, துளசி, ரவிராகவேந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்க, அருண்குமார் இயக்குகிறார். இப்படம் பற்றி அவர், "உலகம் தோன்றும்போது ஜீரோவில் தொடங்கியது. அதனால் இப்படத்திற்கு ஜீரோ என்று தலைப்பு வைத்தேன். உலகம் தோன்றும்போது அமானுஷ்ய சக்தியும் தோன்றியது. அதேபோல் ஆனந்தமாக வாழ்ந்துவரும் இளஞ்ஜோடிகளின் வாழ்க்கையில் எதிர்பாராவிதமாக ஒரு அதீத பலம் வாய்ந்த சக்தி குறுக்கிடுகிறது. இந்த எதிர்பாரா சம்பவத்தால் நடைபெறும் நிகழ்வுகளே படத்தின் கதை" என்கிறார். ஜீரோவிலிருந்து ஹீரோ.

அரவிந்த்

© TamilOnline.com