மூச்


ஒரு தாய்க்கும் பேய்க்கும் இடையே நடக்கும் பாசப்போராட்டத்தைச் சொல்ல வருகிறது 'மூச்.' பாரதிராஜாவின் உதவியாளர் வினுபாரதி இயக்குகிறார். நிதின் நாயகனாகவும், நிஷா கோஷல் நாயகியாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் அபி-பியா என்ற இரு குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். நிதின் கார்த்திக் இசையமைக்கிறார். இரு குழந்தைகளை உயிர் மூச்சாக எண்ணி உரிமை கொண்டாடும் ஒரு தாய்க்கும், பேய்க்கும் இடையே நிகழும் பாசப்போராட்டம்தான் படத்தின் கதை. படத்தில் மனோதத்துவ டாக்டராக பாரதிராஜாவின் சகோதரர் ஜெயராஜ் நடிக்கிறார் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் கோவிந்து. ம்ம்ம். மூச்... வெளியே சொல்லிடாதீங்க.

அரவிந்த்

© TamilOnline.com