அவன் அவள்


குற்றவாளி ஒருவன் அடர்ந்த காட்டுக்குள் அடைக்கலமாகிறான். அந்தக் காட்டில் ஒரு பங்களா. அங்கு ஒரு பெண். அவளோடு பழகி அவளைத் திருமணமும் செய்துகொள்கிறான். அவள் திடீரெனக் காணாமல் போகிறாள். அவள் யார்? அவளுக்கு என்ன ஆனது என்பவற்றைத் திரில்லாகச் சொல்ல வருகிறது 'அவன் அவள்'. வித்தியாசமான கதைகளையும் பாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்னேஷ் இப்படத்தின் நாயகன். நாயகிகளாக தேவிகா மாதவன், சந்திரிகா நடிக்கின்றனர். பா.விஜய், சிநேகன் பாடல்களை எழுத கார்த்திக்ராஜா இசையமைக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்கிரீஷ் மிரினாளி இயக்குகிறார். கொஞ்சம் பயமாத்தான் இருக்கு!

அரவிந்த்

© TamilOnline.com