யுவபுரஸ்கார் விருது பெறும் ஆர். அபிலாஷ்
35 வயதுக்குட்பட்ட இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் சாகித்ய அகாதமி நிறுவனம் வழங்கும் "யுவ புரஸ்கார்" இவ்வாண்டு 'கால்கள்' நூலுக்காக ஆர். அபிலாஷ் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. ம. தவசி, வளர்மதி இதற்கு முன்னர் இந்த விருதைப் பெற்றுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், தக்கலையைச் சேர்ந்த அபிலாஷ், சென்னை பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத் துறையில் முனைவர் பட்ட ஆய்வு மாணவராக உள்ளார். இதுவரை, ஐந்து நூல்களை எழுதியுள்ளார். கவிதை, எழுத்து, வாசிப்பு என ஊடகங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார்.© TamilOnline.com