ரமண மஹரிஷி 118வது வருகை நாள்
ஆகஸ்ட் 23, 2014 சனிக்கிழமையன்று விரிகுடாப் பகுதி ஸ்ரீரமண மஹரிஷி மையம், "ஸ்ரீ ரமண மஹரிஷியின் 118வது திருவண்ணாமலை வருகை நாள்" நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இந்நிகழ்ச்சியில், திருவண்ணாமலை ரமணாச்ரமத்திலிருந்து டாக்டர். ஆனந்த் ரமணன் மற்றும் திரு. கிருஷ்ணன் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்கவுள்ளார்கள்.

இடம்: ஃப்ரிமான்ட் சீனியர் சென்டர், 40086 பசியோ பாத்ரே பார்க்வே, ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா 94538.
நேரம்: காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணிவரை.
நிகழ்ச்சி நிரல்: பாட்டு, வீடியோ, வேத பாராயணம், தீபாராதனை.

நிகழ்ச்சிக்குப் பிறகு மதிய உணவு வழங்கப்படும். அனுமதி இலவசம்.

சுனிதா பரசுராமன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com