களவுத் தொழிற்சாலை


சிலை கடத்தும் சர்வதேச கும்பலைப் பற்றி உருவாகும் படம் களவுத் தொழிற்சாலை. கதிர், வம்சி கிருஷ்ணா நாயகர்களாக நடிக்க, மும்பை மாடல் குஷி நாயகியாக நடிக்கிறார். இயக்குநர் மு. களஞ்சியம் வில்லன் வேடத்தில் தோன்றுகிறார். டி. கிருஷ்ணசாமி கதை, திரைக்கதை, வசனம், எழுதி, இயக்கியிருக்கிறார். இவர் பிரபல இயக்குநர்களிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றியுள்ளார். லொகேஷன் பற்றிக் கூறுகையில் இவர், "சுரங்கத்தின் நுழைவுப்பகுதி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதால் கிட்டத்தட்ட 300 ஆண்டுகளான பாழடைந்த சாதுக்கள் மண்டபத்தைத் தஞ்சைப் பகுதியில் தேடிக் கண்டுபிடித்து படமாக்கினோம். அந்த மண்டபத்திற்கு அருகிலுள்ள மக்களே அதற்குள் சென்று பல தலைமுறை ஆகிவிட்டதாம்" என்கிறார். காதல்+சஸ்பென்ஸ்+க்ரைம் கலந்த திகில் படம் இது. இசை: ஷ்யாம் பெஞ்சமின்.

அரவிந்த்

© TamilOnline.com