பேரன் சொன்ன பிறந்த நாள்
நான் கலிஃபோர்னியாவில் என் மகள் வீட்டுக்கு வந்துள்ளேன். ஒருநாள் இந்தியாவிலுள்ள என் மகன் வீட்டிலிருந்து ஃபோன் போட்டு என் பேத்தியும் பேரனும் பேசினார்கள். அன்றைக்கு இந்திய நேரத்திற்கு என்னுடைய பிறந்த நாள். நேர வித்தியாசத்தினால் அமெரிக்க நேரத்திற்கு அடுத்த நாள் வரும். ஐந்து வயதான என் பேரன் என்னிடம், "தாத்தி, எப்போ கேக் வெட்டப் போறீங்க?" என்று கேட்டான். எங்கள் குடும்பத்தில் பாட்டியை, 'தாத்தி' என்று அழைப்போம். நான் "நாளைக்கு வெட்டுவோம், நாளைக்குதானே இங்கே என் பிறந்த நாள் வரும்" என்றேன். அதற்கு அவன், "நீங்கள் இந்தியாவில்தானே பிறந்தீர்கள், அப்போ இந்திய நேரத்துக்கு தானே கொண்டாடணும், அமெரிக்காவில் பிறந்தால்தானே அந்த டயத்துக்குக்கொண்டாடணும்?" என்று கேட்டடானே பார்க்கலாம். நாங்கள் அசந்து போய்விட்டோம்!

சுமதி ராதாகிருஷ்ணன்,
கலிஃபோர்னியா

© TamilOnline.com