TNF ஆஸ்டின்: சங்கவை கணேஷ் நடனம்
ஜூலை 20, 2014 தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஆஸ்டின் கிளைப் பணிகளின் துவக்க நிகழ்வாக சங்கவை கணேஷின் பரதநாட்டிய அரங்கேற்றம் அமையும். நிகழ்ச்சி மாலை 3:15 மணிக்கு ஈஸ்ட்வியூ பள்ளியில் (4490 E. University Avenue, George Town, TX 786026) நடைபெறும். விருதுநகர் மாவட்டத்தில் ஓர் அரசுப்பள்ளியில் அறக்கட்டளை TNF-ABC திட்டத்தை அமல்படுத்தி கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த ஆஸ்டின் கிளை முடிவு செய்துள்ளது. அரங்கேற்றத்திற்குப் பரிசுப் பொருட்களுக்குப் பதிலாக TNF-ABC திட்டத்திற்கு நன்கொடை தாருங்கள் என்ற சங்கவையின் வேண்டுகோள் பலரின் நெஞ்சத்தைத் தொட்டது. பத்தாம் வகுப்பு பயிலும் சங்கவையுடன் பெற்றோர் மலர் கணேஷ், தங்கை சிற்பா ஆகியோர் கலை, கல்வி, ஈகையில் ஆர்வம் உள்ளோரை வரவேற்கிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு
கணேஷ் - 512.751.0837
மின்னஞ்சல் : gsenthilk@yahoo.com

மலர் கணேஷ்,
ஆஸ்டின்

© TamilOnline.com