பகடை... பகடை...


'பேரழகன்' படத்திற்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின் மலையாள இயக்குனர் சசிசங்கர் இயக்கும் படம் 'பகடை பகடை'. நாயகனாக திலீப்குமாரும், நாயகியாக திவ்யா சிங்கும் நடிக்கின்றனர். ரிச்சு என்ற புதுமுகம் அறிமுகமாகிறார். முக்கிய வேடங்களில் இளவரசு, மயில்சாமி, சந்தானபாரதி, சிங்கமுத்து, முத்துக்காளை உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோவை சரளா அரசியல்வாதியாக நடித்துள்ளார். ராம்ஜி — ஏ.சி.ஜான்பீட்டர் இணைந்து இசையமைத்துள்ளனர். படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com