அமர காவியம்


நடிகர் ஆர்யா தனது தம்பி சத்யாவை கதாநாயகனாக வைத்துத் தயாரிக்கும் படம் "அமர காவியம்". ஜோடியாக புதுமுகம் மியா ஜார்ஜ் அறிமுகமாகிறார். ஜீவா ஷங்கர் ஒளிப்பதிவு செய்து இயக்குகிறார். இப்படம் பற்றி அவர், "காதல் ஒரு நூல் இழைபோல, அதைத் திறம்பட நெய்து பார்ப்பவரைக் கவரச் செய்வது ஒரு இயக்குநரின் கடமை. ஒவ்வொரு நெசவாளனுக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதைப் போலவே ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கும். 'நான்' படத்தில் ஒரு வித்தியாசமான திரைக்கதை அமைப்பில் கதையைச் சொல்லி இருப்பதை போல், முற்றிலும் ஒரு புதிய பாணியை இந்தப் படத்தின் திரைக்கதை அமைப்பில் கையாண்டிருக்கிறேன்" என்கிறார். இசை: ஜிப்ரான்.

அரவிந்த்

© TamilOnline.com