கப்பல்


இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய கார்த்திக் ஜி. க்ரிஷ் இயக்கும் படம் கப்பல். நாயகனாக வைபவ் நடிக்கிறார். பிற கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருகிறது. இதுபற்றி இயக்குநர், "இது கப்பலில் நடக்கும் கதை அல்ல. ஆனால் கதையில் கப்பலின் பல அம்சங்கள் இருக்கும். இதன் லோகோவை வெளியிட்டிருக்கிறோம். அதில் உள்ள வண்ணங்கள் படத்தின் எண்ணற்ற உணர்ச்சிகளை பிரதிபலிப்பதாக இருக்கும். ஷங்கர் சாரிடம் தொழில் கற்றிருந்தாலும், அவர் படங்களின் சாயல் இதில் இருக்காது" என்கிறார். இசை: நடராஜன் சங்கரன்.

அரவிந்த்

© TamilOnline.com