ஆலு போஷ்தோ
தேவையான பொருட்கள்
சிறிய உருளைக் கிழங்கு - 20
வெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
கசகசா - 5 தேக்கரண்டி
முந்திரிப்பருப்பு - 20
பச்சை மிளகாய் - 5
கொத்துமல்லி - 1/4 கிண்ணம்
பால் - 1/2 கிண்ணம்
சீரகம் - 1 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப

செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரிக்கவும். கசகசாவை சூடுவர கடாயில் போட்டுப் பிரட்டி, சுடு தண்ணீரில் ஊற வைக்கவும். முந்திரிப்பருப்பைச் சேர்க்கவும். ஊறவைத்த கசகசா, முந்திரிப்பருப்பு, பச்சை மிளகாய், கொத்துமல்லி, உப்பு சேர்த்து விழுதாக அரைக்கவும்.

கடாயில் வெண்ணெய் சேர்க்கவும். சீரகம் சேர்க்கவும். அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடங்கள் கிளறவும். வெந்த உருளைக்கிழங்கு விழுது, பால் சேர்த்துக் கொதித்ததும் இறக்கி சூடாகப் பரிமாறவும்.

இது ஒரு வங்காளத் தயாரிப்பு. எளிய பொருட்களை வைத்து வித்தியாசமான முறையில் செய்வது. தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்.

கிருஷ்ணவேணி,
வர்ஜீனியா

© TamilOnline.com