உருவாகிறது டான் சேரா
இயக்குனர் விக்ரமனிடம் உதவியாளரான கே.எஸ். சரவணன் திரைக்கதை, இயக்கத்தில் 'டான் சேரா' என்கிற பெயரில் உண்மைச் சம்பவம் ஒன்று படமாகவிருக்கிறது. இப்படத்தைச் சிவசங்கராலயா வழங்க என்.டி. சக்திபாண்டியன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ரஞ்சித். இவர் 'பொன்விலங்கு', 'பாண்டவர் பூமி' போன்ற படங்களில் நடித்தவர்.

இவருக்கு ஜோடியாக சுஜி நடிக்கிறார். இவர்களுடன் வாகை சந்திரசேகர், குயிலி, மீரா கிருஷ்ணன் போன்றவர்களும் நடிக்கவிருக்கின்றனர். படத்திற்கான இசையை பிரின்ஸ்ஜி அமைக்கிறார். வருகிற பொங்கலன்று திரைக்கு வரவிருக்கும் 'டான்சேரா'வின் வெளிப்புறப் படப்பிடிப்பு ஊட்டி, கோவா ஆகிய இடங்களில் நடைபெற இருக்கிறது என்பது படத்தைப் பற்றிய சமீபத்திய தகவல்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com