'பால்யா' நாட்டிய நாடகம்
மே 31, 2014, மாலை 4.00 மணிக்கு Mission City Center for Performing Arts (3250, Monroe St., Santa Clara, Ca 95051) அரங்கத்தில் 'பால்யா' நாட்ய நாடகத்தை நிருத்யகல்யா டான்ஸ் அகாடமி வழங்குகிறது..

குழந்தைப் பருவத்தில் கேட்டு மகிழ்ந்த புராணக் கதைகளைக் கண்டு களிக்க என்றே உருவாக்கப்பட்ட நாட்டிய நாடகம் பால்யா. நிருத்யகல்யா நடனப் பள்ளி மாணவிகளும் பிற நடனமணிகளும் சேர்ந்து புராணங்களைக் கண்முன் கொண்டு நிறுத்துவார்கள். விரிகுடாவின் சிறந்த இசைக்குழுவினர் தியாகராஜர், புரந்தரதாசர் போன்றோரின் பாடல்களைச் செவிக்கு விருந்தாக்க, சிவ கயிலையும் கேரளத்தின் பந்தளக் காடும் பின்னணியில் தோன்றிக் கண்களுக்கு விருந்தாகும். சிறுவர் சிறுமியரோடு சென்று பால்யாவைக் கண்டு மகிழலாம். நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி 'அறம் செய்' நிறுவனத்தின் பொதுநலப் பணிகளுக்கு வழங்கப்படும்.

விவரங்களுக்கு:
வலைமனை: nrityakalya.org
தேஜா - 408.835.0994
பூர்ணிமா - 408.410.7305

நுழைவுச் சீட்டுகள்:
12 வயதும் அதற்குக் கீழும் (இருக்கை தேவையென்றால்) - $15
பெரியோர் - $20
VIP - $30
(மே 5 தேதிக்குள் வாங்கினால் சலுகை உண்டு)

ஸ்ரீனிவாசன்,
சன்னிவேல், கலிஃபோர்னியா

© TamilOnline.com