சைவம்


குடும்ப உறவுகளின் முக்கியத்துவத்தை ஆவணப்படுத்த வருகிறது 'சைவம்'. ஏ.எல். விஜய் இயக்கும் இப்படத்தில் நாசர், அவரது மகன் லுப்துபுதீன், 'தெய்வத் திருமகள்' சாரா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். "சைவம் முழுக்க முழுக்க குடும்ப கலாச்சாரத்தை முன்னிறுத்தும் படமாகும். சொல்லப்போனால் நமது குடும்ப வேர்களைப் பற்றிய கதை இது. நமது முன்னோர்களின் படங்கள் நம் வீட்டில் தொங்குவதன் உண்மையான அர்த்தத்தைப் புரிய வைக்கும் கதை" என்கிறார் இயக்குநர் விஜய். இசை: ஜீ.வி.பிரகாஷ்குமார்.

அரவிந்த்

© TamilOnline.com