யாமிருக்க பயமே
'யாமிருக்க பயமேன்' என்பது பக்தர்களுக்கு ஆறுதல் கூறும் வார்த்தை. அதைச் சற்றே மாற்றி "யாமிருக்க பயமே" என்ற தலைப்பில் பயமுறுத்த வருகிறார்கள் ஒரு படக்குழுவினர். எல்ரெட் குமார், ஜெயராம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் கழுகு கிருஷ்ணா கதாநாயகன். நாயகியாக ரூபா மஞ்சரி. முக்கிய வேடங்களில் ஓவியா, ஆதவ் கண்ணதாசன், கருணா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். "திகில் படங்களைக் கண்டு இருக்கிறோம், விலா நோக சிரிக்க வைக்கும் நகைச்சுவைப் படங்களை கண்டு களித்திருக்கிறோம். ஆனால் இந்த இரண்டும் ஒன்றாக, இப்படம் நகைச்சுவை கலந்த திகில் படமாக இருக்கும்" என்கிறார் இதன் இயக்குனர் டி.கே. பதினாறு புதிய தொழில்நுட்பக் கலைஞர்களை இந்தப் படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகப்படுத்துகிறார்கள் என்பது வரவேற்கப்பட வேண்டிய விஷயம்.அரவிந்த்

© TamilOnline.com