மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கம்: விளையாட்டு தினம்
ஏப்ரல் 26, 2014 அன்று டாலஸ் மெட்ரோப்ளெக்ஸ் தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டு தினம், ப்ளேனோ வில்லியம்ஸ் உயர்நிலைப் பள்ளி திடலில் நடைபெறுகிறது. ஒன்றாம் வகுப்புப் படிக்கும் மாணவர்கள் முதல் பெரியவர்கள்வரை பங்கேற்கும் வகையில், வயதுவாரியாக ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனிப் பிரிவுகள் உள்ளன. ஓட்டப்பந்தயம் , நீளம் தாண்டுதல் போன்ற திறமைகளுக்கான போட்டிகளும், சாக்கு ஓட்டம், மூன்று கால் ஓட்டம் உள்ளிட்ட கலகலப்புப் போட்டிகளும் இடம்பெறுகின்றன. தமிழ்ச் சங்க உறுப்பினர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ளலாம்.

குடும்பத்துக்கு 10 டாலர் வீதம், ஒரே கட்டணத்தில் அனைத்துப் போட்டிகளிலும், குடும்பத்தில் உள்ள அனைவரும் பங்கேற்கலாம். நிகழ்ச்சியின் நிறைவாக கிரிக்கெட் போட்டியும் (Finals) நடைபெறும். போட்டிகளில் பங்கேற்க விருப்பமுள்ள உறுப்பினர்கள் http://zone.sumtwo.com/mts என்ற வலையக முகவரியில் ஏப்ரல் 12ம் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும். பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

மேலும் விவரங்களுக்கு:
வலைமனை - www.dfwmts.org
முகநூல் - www.facebook.com/MetroplexTamilSangam

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்.

© TamilOnline.com