பாரதி தமிழ்ச் சங்கம்: தமிழ்ப் புத்தாண்டு விழா
ஏப்ரல் 19, 2014 அன்று பாரதி தமிழ்ச் சங்கம், தமிழ்ப் புத்தாண்டின் வருகையை மில்பிடாஸ் நகரில் அமைந்துள்ள ஜெயின் கோவில் கலையரங்கில் மாலை 4 மணி முதல் சிறப்பாகக் கொண்டாடவிருக்கிறது. விழாவில் குழந்தைக் கலைஞர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் கலந்து கொள்ளவிருக்கும் பல்சுவை நிகழ்ச்சிகளும், தமிழ் சினிமா பின்னணிப் பாடகி மதுமிதாவுடன் பிரபல 'சங்கமம்' இசைக் குழு இணைந்து வழங்கும் திரையிசை நிகழ்ச்சியும், 'ஒரு வசன நடிப்பு' என்ற சுவாரசியமான போட்டியும் நிகழவிருக்கிறது. அனுமதி இலவசம். அனைவரும் வருக.

மேலதிகத் தகவல்களுக்கு:
தொலைபேசி - 925-307-6774
மின்னஞ்சல் - batsvolunteers@gmail.com
வலையகம் - www.Bharatitamilsangam.org
முகநூல்: facebook.com/bharatitamilsangam

திருமலைராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com