மந்திரக் கன்னி


மாயாஜாலப் படங்கள் குழந்தைகளை மட்டுமல்ல; பெரியவர்களையும் கவரக்கூடியவை. அந்த வகையில் 3D தொழில்நுட்பத்தில் உருவாகிவரும் படம் மந்திரக் கன்னி. இயக்குநர் சௌமிய ரஞ்சன் நாயகனாகவும் நடிக்க, புதுமுகங்கள் காவ்யா கிரண் மற்றும் பாயல் ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் பிரகதி, தண்டபாணி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் இப்படம் ஒரு பேய்க்கதை. ஒரு காதல் ஜோடியைப் பிரித்து காதலியை சிலர் கொன்று விடுகின்றனர். அந்தக் காதலி பேயாக மாறி மற்றொரு பெண்ணின் உடலில் புகுந்து அவர்களை எப்படி பழிவாங்குகிறார் என்பதுதான் படத்தின் கதை. பேய் ஒருவனை கொல்லும் காட்சியை கடலுக்கு அடியில் படமாக்கியுள்ளனர். பாடல்களை ரதன் சந்திரசேகர் எழுதியுள்ளார். வசனத்தை ஹேமமாலினி எழுத கதை, திரைக்கதை, எழுதி இயக்குகிறார் சௌமிய ரஞ்சன். இசை: கே.ராஜ் பாஸ்கர்.

அரவிந்த்

© TamilOnline.com