காவியத்தலைவன்
வணிக சமரசம் இல்லாமல் தீவிரக் கருத்தோடு படங்களை எடுப்பவர் இயக்குநர் வசந்தபாலன். வெயில், அங்காடித் தெரு, அரவான் பார்த்தவர்களுக்கு இது தெரியும். தற்போது இவர் இயக்கிவரும் படம் 'காவியத்தலைவன்'. சுதந்திரப் போராட்ட காலத்தில் மக்களிடையே தேசிய உணர்வைத் தூண்டியதில் நாடகங்களுக்குப் பெரிய பங்குண்டு. நாடகத்திற்கே தங்களை அர்ப்பணித்துக் கொண்ட நாடகக் குழுவினரின் வாழ்க்கையைக் கூறும் படம் இது. சித்தார்த், ப்ருத்விராஜ் ஆகியோர் நாயகர்களாகவும் வேதிகா, அனைக்கா சோட்டி நாயகிகளாகவும் நடிக்கின்றனர். இவர்களுடன் நாசர், தம்பி ராமையா, டி.பி.கஜேந்திரன், கிஷோர், சிங்கப்புலி, பொன்வண்ணன், மன்சூர் அலிகான், பாபு ஆண்டனி, கரிகாலன், குயிலி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். ஜெயமோகன் வசனம் எழுத, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ஒளிப்பதிவு: நீரவ் ஷா. பாடல்களை நா. முத்துக்குமார், பா.விஜய் எழுதியுள்ளனர். வாலியின் பாடல் ஒன்றும் படத்தில் இடம்பெற்றுள்ளது. ஹாலிவுட் படத்தைத் தியாகம் செய்து இப்படத்திற்கு இசையமைக்க ஒப்புக் கொண்டாராம் ஏ.ஆர். ரஹ்மான். அவ்வளவு சிறப்பான கதையம்சம் உள்ள படம் என்கிறார் கோலிவுட் கோவிந்த். சுதந்திரப் போராட்டமும் படத்தில் பின்னணியாக உள்ளதாம். மே மாதம் படம் வெளியாகலாம்.



அரவிந்த்

© TamilOnline.com