கோழிக்குஞ்சு
முட்டைக்குள்ளே கோழிக்குஞ்சு
முண்டிப் பாக்குது.
முடிந்த மட்டும் வெளியே வர
முயற்சி பண்ணுது.
மூணு வாரம் முட்டைக்குள்ளே
முடங்கிக் கிடந்தது.
முட்டையெல்லாம் முன்னும்பின்னும்
அசைஞ்சி கொடுக்குது!
மூக்கினாலே டொக்குடொக்கு
என்று கொத்தியே
முகட்டு ஓட்டை உடைச்சிகிட்டு
வெளியே வந்தது!
காது ஓயச் சத்தமது
கலகலக்குது.
'கிச்சடி புச்சடி' குரலெழுப்பிக்
கூச்சல் போடுது!

இளவேலங்கால் நா.க. நல்லையா

© TamilOnline.com