உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம்: 13வது உலகத் தமிழ்க் கணினி மாநாடு
உலகத் தமிழ்த் தகவல் தொழில்நுட்ப மன்றம் (உத்தமம்) 13வது உலகக் கணினித் தமிழ் மாநாட்டைப் புதுவை மாநகரில் செப்டம்பர் மாதம் 19, 20 மற்றும் 21ம் நாட்களில் நடத்தவுள்ளது. உத்தமம் உலகத் தமிழர்களை இணைப்பதில் முனைப்பாகச் செயல்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் தொடங்கிய கடந்த பதினாறு வருடங்களில் பன்னிரண்டு மாநாடுகளை பல்வேறு நாடுகளில் நடத்தியுள்ளது.

பதின்மூன்றாவது மாநாட்டை, மாபெரும் தமிழ்க் கவிஞர் பாரதிதாசன் பிறந்த புதுவையில் முதன்முதலாக நடத்துகிறது. தமிழ் மற்றும் கணினி குறித்த முயற்சிகளை எடுத்தியம்ப இதுவொரு நல்ல வாய்ப்பு. இதனை நடத்துவதில் புதுவை மாநில முதல்வர் மாண்புமிகு ரங்கசாமி அவர்களும்¸ புதுவைத் தமிழ்ச் சங்கத் தலைவர் திரு. வி. முத்து அவர்களும், பல்லவன் கல்வி நிறுவனங்கள் ஆகியோரும் பெரிதும் உதவுகின்றனர்.

மாநாட்டுக்கான கட்டுரைச் சுருக்கங்கள் மற்றும் கட்டுரைகளை அனுப்பவேண்டிய இறுதி நாட்கள் குறித்த செய்திகள் உத்தமம் நிறுவனத்தின் வலையகத்தில் வெளியாகும். மேலதிகச் செய்திகளுக்கு உத்தமம் நிறுவனத்தின் தலைவர் முனைவர். வாசு அரங்கநாதனை chari@infitt.org என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்புகொள்ளலாம்.

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com