முப்பருப்பு லட்டு
தேவையான பொருட்கள்
பாசிப்பருப்பு - 1 கிண்ணம்
கடலைப்பருப்பு - 1 கிண்ணம்
தோல் உளுத்தம்பருப்பு = 1 கிண்ணம்
சர்க்கரை - 2 கிண்ணம்
நெய் - 2 கிண்ணம்
ஏலத்தூள் - 1 தேக்கரண்டி
பால் பவுடர் - 1/4 கிண்ணம்
குளுகோஸ் - 1/4 கிண்ணம்
டூட்டி ஃப்ருட்டி - 1/4 கிண்ணம்
முந்திரிப்பருப்பு = 1/4 கிண்ணம்

செய்முறை
பாசிப்பருப்பு, கடலைப்பருப்பு, தோல் உளுத்தம்பருப்பு இவைகளை ஒவ்வொன்றாக வெறும் வாணலியில் போட்டு நல்ல வாசனை வரும்வரை வறுக்கவும் ஆறியதும் மிக்ஸியில் நன்றாகப் பொடிக்கவும். சர்க்கரையைப் பொடித்து வைக்கவும். ஒரு பாத்திரத்தில் பொடித்த மாவு, சர்க்கரை, ஏலக்காய்த்தூள், பால் பவுடர், குளுகோஸ் பவுடர், டூட்டி ஃப்ருட்டி, நெய்யில் வறுத்த முந்திரி போட்டுக் கலக்கவும். நெய்யைக் காயவைத்து, மாவுக் கலவையில் விட்டுக் கலந்து சூடாக இருக்கும்போதே உருண்டைகளாகப் பிடிக்கவும். இந்த முப்பருப்பு லட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்

பின்குறிப்பு
* இந்த லட்டை ஒரு வாரம்வரை வைத்திருந்து சாப்பிடலாம்.
* உடனே காலி செய்வதென்றால், மாவுக் கலவையில் சூடான பாலை விட்டுக் கலந்து உருண்டைகளாகப் பிடித்துச் சாப்பிடலாம்.

ராதா நரசிம்மன்,
ஹூஸ்டன், டெக்சஸ்

© TamilOnline.com