வளைகுடா கலைக்கூடம்: திருக்குறள் போட்டி
வளைகுடா கலைக்கூடம் திருக்குறள் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இதுவரை குழந்தைகளின் பதிவு எண்ணிக்கை 150ஐ நெருங்குகிறது

போட்டியின் விதிமுறைகள்:
1. ஒரு திருக்குறளை முழுமையாகச் சொல்லி, அதன் பொருளைத் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் சொன்னால் $1 வழங்கப்படும்.
2. பொருள் சொல்ல முடியாமல் குறள் மட்டும் சொன்னால் 50 சென்ட் வழங்கப்படும்.
3. போட்டியில் பங்கேற்கும் குழந்தைகளுக்குப் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும்.

2014 ஏப்ரல் 5ம் தேதி காலை 8 மணிமுதல் மாலை 4 மணி வரை திருக்குறள் ஒப்பித்தல்போட்டி நடைபெறும். (இடம் பின்னர் அறிவிக்கப்படும்). பெற்றோர்கள் பார்வையாளர்களாகக் கலந்து கொள்ளலாம்.

பதிவு செய்யக் கடைசி நாள்: மார்ச் 10, 2014
பதிவு செய்ய: www.bayareafinearts.org/register

ஏப்ரல் 5, 2014 அன்று மாலை 6 மணி முதல் இரவு 9 மணிவரை, ஜெயின் டெம்பிள், மில்பிடாஸில் பரிசளிப்பு விழா நடைபெறும். சிறப்பு விருந்தினர்களின் பங்கேற்பும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற இருக்கின்றன.

விழா மலர் அட்டைப்படப் போட்டி:
பரிசளிப்பு விழாவில் வெளியிடப்பட இருக்கும் விழா மலருக்கான அட்டைப்படத்தை அலங்கரிக்கப் போகும் ஓவியங்களைக் குழந்தைகள் தீட்டி அனுப்பலாம்.

பிற வகைகளில் ஆதரிக்க விரும்புவோர் பார்க்க:
www.bayareafinearts.org/donate
www.bayareafinearts.org/sponser
www.bayareafinearts.org/volunteer

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com