வெற்றிமாறன் IPS


மலையாளத்தில் வெற்றி கண்ட 'கர்மயோதா' தமிழில் 'வெற்றிமாறன் IPS' ஆகிறது. மோகன்லால் அதிரடி போலீஸ் அதிகாரி வெற்றிமாறனாக நடித்திருக்கிறார். மற்றும் சோனா, சாய்குமார், ரியாஸ்கான், சுகுமாரி, முகேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இசை: எம்.ஜி. ஸ்ரீகுமார். இதன் இயக்குனர் மேஜர் ரவி, "இது நான் இயக்கியுள்ள ஏழாவது படம். பெற்றோர் தம் பிள்ளைகள் மீது அதிகப் பாசம் வைக்கிறோம். அவர்கள் எது கேட்டாலும் வாங்கித் தந்துவிடுகிறோம். செல்ஃபோன், லேப்டாப் உட்பட வாங்கித் தரும் அவர்கள், அவற்றை எந்த விஷயத்திற்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கண்காணிப்பதில்லை. தவறான பாதையில் அவர்கள் போவதற்கும் இது காரணமாகிவிடுகிறது. பத்து வயதுப் பெண்ணைக்கூடப் பாலியல் தொழிலுக்குக் கட்டாயப்படுத்தும் கொடுமையை இதில் தோலுரித்துக் காட்டியிருக்கிறேன்" என்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com