'கிருஹப்பிரவேஷ்' ப்ராபர்டி கண்காட்சி
இந்தியா ப்ராபர்டி டாட் காம் (IndiaProperty.com) நிறுவனம், இந்தியாவிலிருந்து 30 முன்னணி பில்டர்களின் 100 புதிய ப்ராஜக்ட்களை அமெரிக்காவுக்குக் கொண்டு வருகிறது. இது சான்டா கிளாரா, அட்லாண்டா, டாலஸ், நியூ ஜெர்சி ஆகிய முக்கிய நகரங்களில் நடைபெறும். அனுமதி இலவசம் இந்தியா ப்ராப்பர்ட்டி டாட் காம் 'கிருஹப்பிரவேஷ்' கண்காட்சியை அமெரிக்காவில் நடத்துவது 38வது முறையாகும்.

கடந்த 30 மாதங்களில் 5 லட்சம் வாடிக்கையாளர்களிடம் இருந்து அழைப்புகள், 1,680 பேர் ஆன்தஸ்பாட் புக்கிங், 492 பில்டர்கள்/ப்ரமோட்டர்களின் வீட்டுத் திட்டங்கள் அறிமுகம் எனப் புதிய சாதனையைப் படைத்துள்ளது கிருஹப்பிரவேஷ். அமெரிக்காவில் கடந்த முறை நடந்தபோது லோதா, புரவங்கரா, பிரிகேட் குழுமம், தி சென்னை ஹோம்ஸ், டிரினிடி உட்படப் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்றன. இந்தியாவின் முன்னணி நகரங்களான பெங்களூரு, ஐதராபாத், சென்னை மட்டுமின்றி, அடுத்த நிலையில் இருக்கும் கோயம்புத்தூர், திருச்சி, மதுரை போன்ற நகரங்களிலும் சொத்து வாங்கும் வாய்ப்பை வழங்குகிறது கிருஹப்பிரவேஷ்.

இந்தியா ப்ராபர்டி டாட் காம் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி திரு. கணேஷ் வாசுதேவன், ''இந்தியாவின் ரியல் எஸ்டேட் மார்க்கெட்டில் முதலீடு செய்ய அமெரிக்க என்.ஆர்.ஐ.கள் மிக ஆர்வமாக உள்ளனர். இந்திய ரூபாயின் மதிப்பு இறங்கிவருவதும் அதற்கு முக்கிய காரணம். சற்றே மந்தமாக இருந்த இந்திய ரியல் எஸ்டேட் மார்க்கெட், பொதுத்தேர்தல் நெருங்கும் வேளையில் மீண்டும் சீராகத் தொடங்கியிருக்கிறது. முதலீடு செய்வதற்கு இதுவே சரியான நேரம்'' என்கிறார். இந்தக் கண்காட்சிகளில் 15 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான வீட்டுத் திட்டங்கள் விற்பனையாகும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

கிருஹப்பிரவேஷ் 2014 கண்காட்சி விவரம்:
தேதிநகரம் இடம்
2014 ஏப்ரல் 5, 6சான்டாகிளாராகன்வென்ஷன் சென்டர்
2014 ஏப்ரல் 12, 13அட்லான்டாகுளோபல் மால்
2014 ஏப்ரல் 19, 20டாலஸ் இர்விங் கன்வென்ஷன் சென்டர்
2014 ஏப்ரல் 26, 27நியூ ஜெர்சி ஷெரட்டன் எடிசன் ஹோட்டல்


ஆன்லைன் ரியல் எஸ்டேட் துறையில் இந்தியாவின் முன்னணி இணைய நிறுவனமாகும் இந்தியா ப்ராபர்டி ஆன்லைன் பிரைவேட் லிமிடெட். 2006ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிறுவனம் பில்டர்கள், ரியல் எஸ்டேட் ஏஜென்டுகள், வீட்டு உரிமையாளர்கள் ஆகியோர் வீடுகளை விற்பதையும் வாடகைக்கு விடுவதையும் எளிதாக்குகிறது. தமது தேவைக்கேற்ற வீடுகளைத் தேர்வு செய்யும் தளமாக இது விளங்குகிறது. இணையதளத்தை மாதந்தோறும் சராசரியாக 12 லட்சம் பேர் பார்வையிடுகிறார்கள். இந்தியாவின் 20 நகரங்களில் 4.5 லட்சம் வீடுகள் இதில் பட்டியலிடப்பட்டுள்ளன.

மேலும் தகவல்களுக்கு:
லிஜின் தாமஸ் - lijin.thomas@indiaproperty.com
தொலைபேசி - 919840351137

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com