செளசெள பொடிமாஸ்
தேவையான பொருட்கள்

செளசெள - 2
கடலைப் பருப்பு - 1/2 கிண்ணம்
உளுத்தம் பருப்பு - 1/2 கிண்ணம்
மிளகாய் வற்றல் - 5 அல்லது 6
பெருங்காயம் - கொஞ்சம்
மஞ்சள் பொடி - சிறிது
தேங்காய்த் துருவல் - 3 ஸ்பூன்
கடுகு - தாளிப்பதற்கு
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தாளிப்பதற்கு

செய்முறை

செளசெளவைத் தோல் சீவிப் பொடியாய் நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டுக் கடுகு பெருங்காயம் தாளிக்கவும். உப்பு, மஞ்சள் பொடி போட்டுச் சுருள வதக்கவும்.

கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, பெருங்காயம் இவற்றை எண்ணெய்விட்டு வறுத்து மிக்சியில் கொஞ்சம் கரகரப்பாய் பொடிசெய்து வைத்துக் கொள்ளவும்.

காய் நன்றாக வெந்தவுடன் இந்தப் பொடி மற்றும் தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறவும். கெட்டியாக ஆனதும் இறக்கி வைத்து உபயோகிக்கவும்.

இதைச் சாதத்தில் பிசைந்தும் சாப்பிடலாம். சாதத்துடன் தொட்டுக் கொள்ளலாம். மிக்க சுவையாய் இருக்கும்.

இவையெல்லாம் தவிர செளசெளவை சாம்பார், மோர்க்குழம்பு, வற்றல் குழம்பு எல்லாவற்றிலுமே போட்டுச் சமைக்கலாம். மிக ருசியாய் இருக்கும்.

© TamilOnline.com