டெலவேர்: பொங்கல் விழா
ஜனவரி 18, 2014 தேதி சனிக்கிழமை அன்று TAGDV (Tamil Assosiation of Greater Delaware Valley) பொங்கல் விழாவை மால்வெர்னில் உள்ள கிரேட் வேல்லி உயர்நிலைப் பள்ளியில் (Great Valley Highschool, Malvern) கொண்டாட உள்ளது. விழா 2.30 மணிக்குத் துவங்கும். இதில் சிறுவர் சிறுமியரின் ஆடல் பாடல்கள் மட்டுமல்லாமல் சூப்பர் டான்ஸர் போட்டியும் நிகழ உள்ளது. சிறப்பம்சமாக விஜய் டி.வி. புகழ் 'படவா' கோபியின் காமெடி கலக்கலும், பலகுரல் நடிப்பும் உள்ளன. சிவாஜி கணேசன் கலை மன்றம் வழங்கும் 'ஹாலிவுட் அழைக்கிறது' என்னும் நகைச்சுவை நாடகமும் உண்டு. கலை நிகழ்ச்சிகளோடு இனிய பொங்கல் விருந்தையும் சுவைக்க ஏற்பாடு செய்யப்பட்டள்ளது.

லதா சந்திரமௌலி,
பென்சில்வேனியா

© TamilOnline.com