பாரதி தமிழ்ச் சங்கம்: தீபாவளி நிகழ்ச்சி
பாரதி தமிழ்ச் சங்கம் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டு சற்று முன்னதாக அக்டோபர் 12 அன்றே மில்பிடாஸ் ஜெயின் கோவில் அரங்கத்தில் கொண்டாடியது. சிறுவர் முதல் பெரியோர் வரை நூற்றுக்கும் மேலான கலைஞர்கள் பங்கேற்று, கர்நாடக இசை, கருவியிசை, மெல்லிசை, பரதநாட்டியம், திரை நடனம், சிறு நாடகம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகளை வழங்கினார்கள். நிகழ்ச்சியின் நடுவே மைத்ரி குழுவினர் வழங்கிய பஞ்சவாத்திய இசை அனைவரையும் கவர்ந்தது.

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com