ஓக்லஹோமா: தமிழ்ச் சங்க வெள்ளி விழா
அக்டோபர் 26, 2013 அன்று ஓக்லஹோமா தமிழ்ச் சங்கத்தின் வெள்ளிவிழா தல்சா மாநகரில் உள்ள தோரோ அகாதமி அரங்கில் கொண்டாடப்பட்டது. பட்டிமன்றம், உரைகள், கலைநிகழ்ச்சிகள் எல்லாம் இதில் இடம்பெற்றன. ஓக்லஹோமாவில் வாழும் சுமார் முந்நூறு தமிழ்க் குடும்பங்கள் கலந்துகொண்டன. தமிழர் அல்லாத பிற மாநிலத்தவரும் அமெரிக்கர்களும் கூட வந்திருந்து தமிழ் நிகழ்ச்சிகளைக் கண்டு ரசித்தனர். கன்சாஸ் ராஜாவின் இன்னிசைக் கச்சேரியும் நடைபெற்றது.

வைத்தியநாதன்,
தல்சா, ஓக்லஹோமா

© TamilOnline.com