பப்பாளி
உணவுக் கடை நடத்தும் இளைஞன் ஒருவன் எப்படி ஐ.ஏ.எஸ் ஆகிறான் என்பதை நகைச்சுவை கலந்து சொல்ல வருகிறது பப்பாளி. சரவண மீனாட்சி சீரியலில் நடிக்கும் செந்தில் நாயகனாக நடிக்க, இஷாரா நாயகியாக அறிமுகமாகிறார்.முக்கிய வேடத்தில் நிரோஷா நடிக்கிறார். படத்தை கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் படங்களை இயக்கிய மூர்த்தி, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். யுகபாரதி பாடல்களை எழுத விஜய் எபிநேசர் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com