அஞ்சாத சண்டி


சரத்குமாரும் ப்ரியாமணியும் முதன்முறையாக இணைந்து நடிக்கும் படம் அஞ்சாத சண்டி. இப்படத்தில் அதிரடி ஆக்‌ஷன் நாயகியாக நடிக்கிறார் ப்ரியாமணி. முக்கிய வேடத்தில் ஆஷிஷ் வித்யார்த்தி, கிருஷ்ணமராஜூ ஆகியோர் நடிக்கின்றனர். தெலுங்கில் பல வெற்றிப் படங்களை இயக்கிய சமுத்திரம் இப்படத்தை இயக்குகிறார். ப்ரியாமணியின் சண்டைப் பயிற்சியாளராக நடிக்கிறார் சரத்குமார். இசை: நாகேஷ். காஞ்சனா, சென்னையில் ஒரு நாள் படங்களுக்கு பிறகு சரத்குமாருக்கு பெயர் சொல்லும் படமாக இது இருக்கும் என்கிறார் இயக்குநர் சமுத்திரம். பேர் சொல்லட்டும்.

அரவிந்த்

© TamilOnline.com