சாந்தனுவின் வாய்மை


பாக்யராஜின் மகன் சாந்தனு நாயகனாக நடிக்கும் படம் 'வாய்மை'. நாயகியாக அங்கிதா நடிக்கிறார். மக்களுக்கும், சட்டத்திற்கும் இடையேயான உறவை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படத்தைச் செந்தில்குமார் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் ப்ருத்வி பாண்டியராஜன், தியாகராஜன், மனோஜ் பாரதிராஜா, ராம்கி, பூர்ணிமா பாக்யராஜ், ஊர்வசி, நமோ நாராயணா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு கவுண்டமணி நகைச்சுவைப் பாத்திரத்தில் தோன்றுகிறார். வைரமுத்துவின் பாடல்களுக்கு ஜெய் இசையமைக்கிறார். விரைவில் திரைக்கு வரவிருக்கிறது இப்படம்.

அரவிந்த்

© TamilOnline.com