அரண்மனையில் ஹன்சிகா


ஹன்சிகா மொத்வானி நாயகியாக நடிக்கும் படம் அரண்மனை. இதில் நாயகனாக சுந்தர் சி. நடிக்கிறார். மற்றொரு நாயகன் வினய். ஹன்சிகாவுடன் கூடுதல் நாயகிகளாக லட்சுமிராய், ஆண்ட்ரியா ஆகியோர் நடிக்கின்றனர். நகைச்சுவையாகவே தயாரித்து இயக்கி வந்த சுந்தர் சி, இப்படத்தில் வேறொரு களத்தைக் கையில் எடுத்திருக்கிறார். ரஜினியின் சந்திரமுகி படத்தைப் போன்று இப்படமும் ஆவி படமாக உருவாகவிருக்கிறது. நடிப்பதுடன் படத்தை இயக்குவதும் சுந்தர் சி.தான்.

அரவிந்த்

© TamilOnline.com