நந்தலாலா மிஷன்: 'பரமப்ரேமா' இசை நிகழ்ச்சி
நவம்பர் 23, 2013 அன்று நந்தலாலா மிஷனும், ஸ்ரீராம லலிதாகலா மந்திர் கலைக்கூடமும் இணைந்து ஓர் இசை விருந்தை ஏற்பாடு செய்துள்ளனர். இதற்கு நந்தலாலா மிஷன் நிறுவனர் பூஜ்யஸ்ரீ மதியொளி சரஸ்வதி

அவர்கள் வருகை தரவுள்ளார்.

6-7 நூற்றாண்டுகளில் வாழ்ந்த கேரள மன்னரான குலசேகராழ்வார் ஸ்ரீமுகுந்தனைத் துதித்து 'முகுந்தமாலா' என்னும் பக்தி நூலை இயற்றியுள்ளார். இந்தப் பாசுரங்களிலிருந்து எவ்வித எதிர்பார்ப்புமின்றிக் கடவுளிடம்

அன்பு செலுத்துவது எப்படி என்பதை அறியமுடியும். திருமதி. ஜெயஸ்ரீ வரதராஜனின் இசையில் இந்தப் பாடல்கள் இசைக்கப்படும். தவிர, பல்வேறு இந்திய மொழிகளில், ஞானியரால் இயற்றப்பட்ட பக்திப் பாடல்களும்

பாடப்படும். இவற்றை நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடவுள்ளார்கள். தெளிவான விளக்கவுரையும், பக்கவாத்தியங்களும் கூடிய இவ்விசை நிகழ்ச்சி செவிக்கும் கண்ணுக்கும் நல்விருந்தாக அமையும்.

தேதி: நவம்பர் 23, 2013
நேரம்: பிற்பகல் 4:00 மணி முதல் 7:00 மணி வரை. (இருக்கை அமைவு 3:30 மணிக்குத் தொடங்கும்)
இடம்: ஸ்பேங்கன்பர்க் அரங்கம்
780, அரஸ்ட்ராடேரோ ரோட், பாலோ ஆல்டோ, கலிஃபோர்னியா. 94306

நுழைவுச் சீட்டு: $100, $30, $20
தொலைபேசி: 408.498.1604
மின்னஞ்சல்: nandalalamission@gmail.com

திரட்டப்படும் தொகை நந்தலாலா மிஷனின் சமூகப் பணிகளுக்கு நன்கொடையாக அளிக்கப்படும். நந்தலாலா மிஷனின் சமூகப்பணிகளுள் குறிப்பிடத்தக்கவை:
சிறுவர் கல்வித் திட்டம்: பள்ளிப் பிள்ளைகளுக்கு இலவசப் புத்தகப் பைகள் வழங்குதல், பல்வேறு ஊடகங்கள் மூலம் பயில்வதை ஊக்குவிக்க ஒலிக்கருவிகள் வழங்குதல்.
இளைஞர் கச்சேரி: திறமையுள்ள இளைய தலைமுறையினரின் இசைஞானத்தை வெளிக்காட்ட அவர்களின் இசைக் கச்சேரிகளுக்கு ஏற்பாடு செய்வதும், பரிசு வழங்குதலும்.
மாத்ரு சேவா: மாதந்தோறும் தன்னார்வத் தொண்டர்கள் மூலம் பலசரக்குச் சாமான்கள் திரட்டி, சத்துணவு சமைத்து வழங்குதல்.
பாலகிருஷ்ணா திட்டம்: சிறுவயதினருக்கு நல்ல பால் உணவு கிடைக்கும் பொருட்டுப் பால் மற்றும் வெண்ணெய் சேகரித்து, நலிந்த பாலகர்களுக்கு வழங்குதல்.
நலம்வாழ: சிறந்த மருத்துவர்களுடன் கலந்துரையாடும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தல்.

தகவல்: ராஜி ராமச்சந்திரன்
தமிழில்: லக்ஷ்மி ஷங்கர், அட்லாண்டா, ஜார்ஜியா

© TamilOnline.com