'இளையராகம்' வழங்கும் தமிழ்த் திரையிசை
நவம்பர் 2, 2013 அன்று சான் ஃபிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியைச் சேர்ந்த இளையராகம் குழுவினரின் தமிழ்த் திரையிசை நிகழ்ச்சி மாலை 5:30 மணி முதல் சாபோ காலேஜ், ஹேவர்ட் (Chabot College, Hayward) அரங்கத்தில் நடைபெற உள்ளது. தொண்டு நிறுவனங்களான 'அறம்செய்' மற்றும் 'அக்ஷயா அறகட்டளை' ஆகியவற்றுக்கு நிதி திரட்டும் நிகழ்ச்சியாக இது நடக்கிறது.

"இசையால் தயை" (Philanthropy through Music) என்ற கொள்கையைக் கொண்ட இளையராகம் இசைக்குழு, இந்த நிகழ்ச்சியை மாபெரும் இசைவிருந்தாகப் படைக்க உழைத்து வருகின்றனர். ஏழு என்ற எண்ணைத் தலைப்பாகக் கொண்ட இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற பாடல்களையும், இசைக் கோர்வைகளையும் வழங்க இருக்கின்றனர்.

'அறம்செய்' உலகெங்கிலும் உள்ள அடித்தள மக்களின் கல்வி, சுகாதார வளர்ச்சிக்குச் சேவை செய்யும் தன்னார்வ இயக்கம். இந்நிகழ்ச்சியில் திரட்டப்படும் நிதி, சென்னையில் எய்ட்ஸ் நோய் பாதித்துக் கைவிடப்பட்ட குழந்தைகளின் மறுவாழ்வுக்கும், கலிஃபோர்னியாவில் பாலியல் கொடுமைகளில் பாதிக்கப்பட்டவர்க்கு அடிப்படைத் தேவைகளை வழங்கும் பணிக்கும் செலவிடப்படும்.

'அக்ஷயா அறக்கட்டளை' மதுரை நகரில் ஆதரவற்ற ஏழைகளுக்கு உணவும் இருப்பிடமும் வழங்கி வரும் தொண்டு நிறுவனம். அக்ஷயா இல்லத்தின் பெருகிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், இந்த இல்லத்தில் பணியாற்ற வரும் தன்னார்வலர்களுக்கு வசதிகள் செய்யவும் இந்த நிதி பயன்படுத்தப்படும். இந்நிகழ்ச்சிக்கு வளைகுடாப் பகுதியை சேர்ந்த பாரதி தமிழ்ச் சங்கம் ஆதரவாக இணைந்துள்ளது.

விவரங்களுக்கு:
ஃபேஸ்புக்: facebook.com/ilayaragam
வலைமனை: aramsei.org மற்றும் akshayausa.org
நுழைவுச்சீட்டு வாங்க: sulekha.com

செய்திக் குறிப்பிலிருந்து

© TamilOnline.com