சான்டியாகோ தமிழ்ச்சங்கம் நாடகம்
நவம்பர் 5, 2005 அன்று தீபாவளியை ஒட்டி 'காலம் மாறினால்' என்ற நாடகத்தை சான்டியாகோ தமிழ்ச்சங்கம் மேடை யேற்றியது. எஸ்கொன்டிடோவில் உள்ள கலி·போர்னிய நிகழ்கலைகள் மையத்தில் நடந்தது. இந்த நகைச்சுவை நாடகத்தை ரமேஷ் வெங்கட்ராமன் எழுதி இயக்கினார்.

வேலையில்லாப் பட்டதாரிகள் இருவர் ஒரு காலயந்திரத்தை வைத்துக்கொண்டு எதோ செய்ய எத்தனிக்கிறார்கள். கண்ணகி மதுரையை எரித்த காலம், வீரபாண்டிய கட்டபொம்மன் ஆங்கிலேயரை எதிர்த்த காலம், இந்தியா சுதந்திரம் பெற்றுப் பிரிவினை நடந்த காலம் ஆகிய மூன்று காலங்களுக்கு அது அவர்களைக் கொண்டு செல்கிறது. எதிர்காலம் தெரிந்ததால் அவர்கள் சரித்திரத்தை மாற்ற முயற்சிக் கின்றனர். அவர்களின் முயற்சிகள் நகைச்சுவையோடு சொல்லப்பட்டிருக்கிறது.

அரங்கின் பின்னணி வேலைகளைக் கணினியின் மூலம் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள்.

காலயந்திரம் மூலமாக விண்வெளிக்குச் செல்வது போன்ற உணர்ச்சியைத் திறம்பட ஏற்படுத்தியிருந்தனர். பழைய திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி அந்தக் கால கட்டத்தில் இருப்பது போன்ற ஒரு சூழ்நிலையை உருவாக்கி இருந்தனர். இதன் தொழில்நுட்பக் குழுவினரான ரமேஷ் வெங்கட்ராமன், ஷ்யாம் சந்திரசேகரன் மற்றும் அனுஷ் கிருஷ்ணசுவாமி பாராட்டுக் குரியவர்கள்.

ஆண்களின் ஆதிக்கம் இதில் மிகுந்து காணப்பட்டாலும், கண்ணகியாக நடித்த ஆர்த்தி ஸ்ரீவாஸ¤ம், ராணி கோப்பெருந் தேவியாக நடித்த அனு ராஜசேகரனும் அழுத்தமாக நடித்தனர். மீரா பென் ஆக மீரா வெங்கடேஷ் நடித்திருந்தார். அசோகன் செல்வராஜ் கம்பீரமான கட்டபொம்மனாகத் தத்ரூபமாக நடித்திருந்தார். எட்டப்பனாக கிருஷ்ணன் லக்ஷ்மிநரசிம்மன், பாண்டிய மன்னனாக ராஜ் ராஜசேகரன் ஆகியோரும் நன்றாக நடித்தனர். இதில் முக்கியப் பாத்திரம் ரமேஷ் வெங்கட்ராமனுடையது. ஆங்கிலேய ஜாக்ஸன் துரை, மவுண்ட் பாட்டன் ஆகிய பாத்திரங்களில் ஜானி காரன் (Johnny Garon) அருமையாக நடித்தார்.

மூன்றாவதாகச் சித்தரிக்கப்பட்ட சுதந்திரம் பெறுவதற்கு முன்பு இருந்த இந்தியா எல்லோரையும் கவர்ந்தது என்றால் அதற்குக் காரணம் மேடையின் நவீன அமைப்பும் வழக்கில் உள்ள பேச்சுமே.

எல்லா நடிகர்களும் பாத்திரத்தை உணர்ந்து நடித்தனர். எம்.என்.கிருஷ்ண ஸ்வாமி (காந்தி), சாம் நாராயணன் (நேரு), எம்.சி.வெங்கடேஷ் (ஜின்னா) ஆகியோரின் நடிப்பும் பாராட்டத்தக்கவை.

சான்டியாகோ தமிழ்ச் சங்கம் பற்றி மேலும் அறிய: www.sdts.org

ஆங்கிலத்தில்: சுசீலா நாராயணன்
தமிழாக்கம்: சரஸ்வதி தியாகராஜன்

© TamilOnline.com