ஹர்சனின் ரணம்


விஜயசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் 'ரணம்'. இதில் ஹர்சன் நாயகனாகவும், பூனம் கவுர் நாயகியாகவும் நடிக்கின்றனர். முக்கிய வேடங்களில் சங்கிலி முருகன், எம்.எஸ். பாஸ்கர், சிங்கமுத்து, நான் கடவுள் ராஜேந்திரன், சத்யா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை: மரியா மனோகர். இப்படத்தில் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றிற்காக நாயகன், நாயகி இருவருக்கும் 400 வகை உடைகள் பயன்படுத்தப்பட்டுள்ளது தமிழ்த் திரையில் முதல் முறை என்கிறார் கோலிவுட் குருவியார்.

அரவிந்த்

© TamilOnline.com