யாசகன் மகேஷ்


டைரக்டர் அமீரிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய துரைவாணன் இயக்கும் படம் ‌யாசகன். இதில் நாயகனாக மகேஷ் நடிக்க, நிரஞ்சனா நாயகியாக அறிமுகமாகிறார். ஜெயச்சந்திரன், பவானி, சாமுவேல் சந்திரன், ஆனந்தி, ஜானவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். கதாநாயகன் மகேஷ் வித்தியாசமானவன். அன்பு, பாசம், காதல், பிரிவு, வேதனை, இழிவு, பழி என எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டவன். ஆனாலும் இவ்வுலகில் வாழவே ஆசைப்படுகிறான். வாழவைத்ததா இவ்வுலகம் என்பதற்கு விடையாக விரைவில் திரைக்கு வர இருக்கிறது யாசகன். இசை: சதீஷ் சக்கரவர்த்தி,

அரவிந்த்

© TamilOnline.com