FAIRPRO USA வழங்குகிறது ரியல் எஸ்டேட்டில் முதலீட்டு வாய்ப்பு
தங்கம் விலை கிடுகிடுவென்று ஏறிக்கொண்டிருப்பதைக் குறித்து இந்திய அரசே கவலை கொண்டு அதன்மீது வரிமேல் வரி விதிக்கிறது. ஆனால் தங்கத்துக்குச் சற்றும் குறைவில்லாத, அத்தியாவசியத் தேவையான குடியிருப்புகளை இன்னமும் நியாயமான விலையில் இந்தியாவின் பெருநகரங்களில் வாங்க முடிகிறது. குறிப்பாக, சென்னைக்கு உள்ளேயும் புறநகரிலும் உள்ள விரைந்து வளரும் பகுதிகள் நல்ல முதலீட்டு வாய்ப்புகளாக அமைந்திருக்கின்றன.

பழைய மகாபலிபுரம் சாலை (ஓ.எம்.ஆர்), கிழக்குக் கடற்கரைச் சாலை (ஈ.சி.ஆர்), பல்லாவரம்-குரோம்பேட்டை, தாம்பரம், வண்டலூர், கூடுவாஞ்சேரி, செங்கல்பட்டு, போரூர், மேடவாக்கம். பள்ளிக்கரணை, வேளச்சேரி, வடசென்னை ஆகியவை இத்தகைய தெரிந்தெடுத்த இடங்களில் அடங்கும். ஓரளவு வளர்ச்சி குறைந்ததாகக் கருதப்படும் சென்ற ஆண்டிலேயே இங்கெல்லாம் 8 முதல் 10 சதம் வரை விலை உயர்வு காணப்பட்டது.

பழைய மகாபலிபுரம் சாலை ஐ.டி. காரிடார் ஆகிவிட்டது. வேளச்சேரியிலும் அபரிமிதமான வணிக வளர்ச்சி காணப்படுகிறது. ஆனால், இவற்றோடு ஒப்பிட்டால் சோழிங்கநல்லூர், கேளம்பாக்கம் முதலிய இடங்கள் முதலீட்டைப் பன்மடங்காக்கும் வாய்ப்பைத் தரக் காத்திருக்கின்றன.

வடசென்னையில் தண்டையார்பேட்டை, திருவொற்றியூர், எண்ணூர், வியாசர்பாடி, பெரம்பூர், கொளத்தூர், கொரட்டூர், மாதவரம், மணலி, வண்ணாரப்பேட்டை, சேலைவாயல், புழல், அமைந்தகரை, வில்லிவாக்கம், அயனாவரம் ஆகிய பகுதிகளில் ஒரு புத்துணர்ச்சியோடு அடுக்குமாடிக் கட்டடங்கள் வந்துகொண்டிருக்கின்றன. புதிதாக வரும் குடியிருப்புகள் ஜிம், புல்வெளி, தோட்டம், நீச்சல் குளம், தியான மண்டம், யோகம் பயிலும் அறை, மருத்துவ வசதி, அருகே கல்விக் கூடங்கள் என்று எல்லா நவீன வசதிகளையும் கொண்டவையாக வருகின்றன.

சென்னை மெட்ரோ ரயில், மோனோ ரயில் என்று போக்குவரத்து வசதிகளும் பணி முடியும் தறுவாயில் உள்ளதால், நகரின் எந்தப் பகுதியும் எங்கிருந்தும் தொலைவல்ல என்ற நிலை வந்துவிடும். நகர நெரிசலைத் தவிர்த்து அதே நேரத்தில் நகரத்தின் வசதிகளை அனுபவிக்க இந்த இடங்களில் தயக்கமில்லாமல் ஃப்ளாட்கள் வாங்கலாம். தாமே குடியிருக்க அவசியமில்லாவிட்டாலும், உடனடியாக நல்ல வாடகை, நாளடைவில் முதலீட்டுப் பெருக்கம் எனவும் பெற இவை வாய்ப்புத் தருகின்றன.

சென்னை மட்டுமல்ல, கோவை, மதுரை, பெங்களூரு, மைசூர், ஹைதராபாத், கொச்சி ஆகியவை விரைந்து வளரும் நகரங்கள்தாம். இந்த நகரங்களில் ரியல் எஸ்டேட்டில் நீங்கள் முதலீடு செய்யும் வாய்ப்பை FAIRPRO USA இப்போது அமெரிக்காவின் பல நகரங்களுக்கும் கொண்டு வருகிறது. இந்தியாவின் சிறந்த பில்டர்களான அக்‌ஷயா, ஜெயின் ஹௌசிங், அமரப்ரகாஷ், TVH உட்படப் பல நிறுவனங்கள் கணக்கற்ற வாய்ப்புகளை உங்கள் கண்முன் விரிக்கின்றன.

நீங்கள் எதிர்பார்க்க வேண்டிய நாட்கள்:
சான் ஹோசே - அக்டோபர் 11-12
டாலஸ் - அக்டோபர் 19-20
நியூ ஜெர்சி - அக்டோபர் 26-27

மேலதிகத் தகவலுக்கு
வலையகம்: event.indiaproperty.com
தொலைபேசி: 214.257.0359

© TamilOnline.com