மஞ்சப்பை


இயக்குநர் சற்குணத்தின் உதவியாளர் ராகவன் இயக்கும் படம் மஞ்சப்பை. விமல் நாயகனாக நடிக்க, லக்ஷ்மிமேனன் நாயகியாக நடிக்கிறார். ராஜ்கிரண் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார். இயக்குநர் லிங்குசாமி தயாரிக்கிறார். இப்படத்தை பற்றி இயக்குநர், "நம்முடைய உறவுகளிலேயே மிகவும் உன்னதமானது தாத்தா-பேரன் உறவுதான். அது இரண்டு தலைமுறைகளோட அன்பு விளையாட்டு, முதன்முறையா ராஜ்கிரண் தாத்தாவாக நடிக்கிறார். வயசானவனாக நடிப்பது நல்லா இருக்காதுன்னு முதல்ல யோசிச்சவர் கதையைக் கேட்ட உடனே ஒப்புக் கொண்டார். பேரனாக விமல் நடிக்கிறார். ரெண்டுபேரும் பண்ற கலாட்டாக்களினால் சிரிப்பு வெடிக்கும், சென்டிமென்டுல அழுகை வெடிக்கும். லக்ஷ்மிமேனன் நவீன பொண்ணா நடிச்சிருக்காங்க. கிராமத்துலேருந்து சென்னைக்கு வர்ற அப்பாவி இளைஞனை மஞ்சப்பைன்னு கூப்பிடுறது வழக்கம். அப்படி ஒரு அப்பாவியின் லைஃப் ஸ்டோரிதான் இது" என்கிறார். இசை: ஜிப்ரான்.

அரவிந்த்

© TamilOnline.com