என்னமோ ஏதோ


கௌதம் கார்த்திக் நாயகனாக நடித்து வரும் புதிய படம் 'என்னமோ ஏதோ'. இதில் நாயகிகளாக ராகுல் ப்ரீதா, நிகிஷா பட்டேல் ஆகியோர் அறிமுகமாகின்றனர். முக்கிய வேடங்களில் பிரபு, அழகம் பெருமாள், மதன் பாப், மனோபாலா, அனுபமா குமார், சுரேகா வாணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். தெலுங்கில் வெற்றிபெற்ற 'அலா மொட்லயிண்டி' என்ற படத்தின் ரீமேக் இது. இசை: இமான். இயக்கம்: ரவி தியாகராஜன். இப்படத்திற்காக அனிருத், கமல் மகள் ஸ்ருதி ஹாசன் இணைந்து ஒரு பாடலைப் பாடியுள்ளனராம்.

அரவிந்த்

© TamilOnline.com