ஆல் இன் ஆல் அழகு ராஜா


ராஜேஷ்.எம் இயக்கி வரும் புதிய படம் 'ஆல் இன் ஆல் அழகு ராஜா'. கார்த்தி-காஜல் அகர்வால் இணைந்து நடிக்கும் இப்படத்தில் பிரபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். உடன் சந்தானம், ராதிகா ஆப்தே உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த ஃபேமிலி சென்டிமென்ட்டாக உருவாகி வரும் இப்படத்திற்கு இசை தமன். இப்படத்தில் கார்த்திக்கு இரட்டை வேடம் என்று காதைக் கடிக்கிறார் கோலிவுட் குருவியார். இந்தப்படம் தீபாவளிக்கு வெளியாக இருக்கிறது.

அரவிந்த்

© TamilOnline.com