இந்தியா கம்யூனிடி மையத்துடன் சேவத்தான்
சான் ஃப்ரான்சிஸ்கோ பகுதியிலுள்ள அனைத்து இந்தியச் சங்கங்களையும் இணைத்து இந்தியா கம்யூனிடி சென்டர் ஒவ்வோராண்டும் ஒரு தொடர் ஓட்ட நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இதன்மூலம் திரட்டப்படும் நிதி சேவைச் சங்கங்களுக்கே நிதியாக வழங்கப்படுகிறது. ஜூலை 16, 2013 அன்று நடந்த இந்த சேவத்தான் நிகழ்ச்சியில் பாரதி தமிழ்ச் சங்கம் சார்பாகத் திரு. வெங்கடேஷ் தலைமையில் 78 பேர் பங்கேற்று நிதி திரட்ட உதவினர். திருச்சிற்றம்பலம் நடனப் பள்ளியின் தீபா மகாதேவன் மற்றும் குழுவினர் பரத நாட்டிய நிகழ்ச்சியை சேவத்தானில் வழங்கினார்கள்.

திருமலை ராஜன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா

© TamilOnline.com